DMK
“வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் திட்டமிடும் அ.தி.மு.கவினர்” - தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு!
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தி.மு.க, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.
அந்த மனுவில், நாங்குநேரி , விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலில் அதிக பாதுகாப்பு அளிக்கவேண்டும். பதற்றமான இடங்களில் மேலும் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும்.
அ.தி.மு.க-வினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதால் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். மேலும் பத்திரிகையாளர்களும் அதனை கண்காணிக்க உரிய வகையில் அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விக்கிரவாண்டி பகுதியில் வாக்குச்சாவடிகளை அ.தி.மு.க கைப்பற்ற உள்ளதாகவும், வன்முறைக்கு வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
நாங்குநேரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அ.தி.மு.க.வினர் பணம் விநியோகம் செய்வதை மறைப்பதற்காக தி.மு.க மீது வீண் பழி சுமத்துகிறார்கள் எனப் பதிலளித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!