DMK
“விக்ரவாண்டி தொகுதியிலும் நமது வெற்றி தொடர வேண்டும்” - டி.ஆர்.பாலு பேச்சு!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் குரோம்பேட்டையில் நடைபெற்றது,. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை கழக முதன்மைச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
டி.ஆர்.பாலு பேசும்போது, “1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 5 முறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்த மாநிலத்தை ஆட்சிசெய்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. சேலம் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் கலைஞர் ஆட்சியில் வரிவடிவம் பெற்றன. பெண்களுக்கு சொத்துரிமை எனும் சட்டத்தையும் நிறைவேற்றினார்.
கலைஞரின் ஆட்சிக்குப் பிறகு தற்போது நமது ஆட்சி வரப்போகும் நாள் நெருங்கிவிட்டது. நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றாக வேண்டும். கழக நிர்வாகி என்ற முறையில் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நமது வெற்றி தொடரவேண்டும்; வெற்றியில் வெற்றிடம் ஏற்பட்டு விடக்கூடாது.
தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்க வேண்டும். அவர் பின்னாலே நாம் தொடர வேண்டும் விக்ரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க வெற்றிக்காகப் பாடுபடவேண்டும்” என்று தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் தலைவர் தளபதி அவர்களின் வெற்றிப்பாதையில் தி.மு.க என்ற தலைப்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில் குமார், அறிஞர் அண்ணா அன்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் மருத்துவர் நா.எழிலன், சமூகநீதி தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் என்ற தலைப்பில் புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!