DMK
“அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தி.மு.க இளைஞரணியில் இணைந்து கொள்ளலாம்”: அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நெடுங்கூர், ஈசனத்தம், உப்பிடமங்கலம் ஆகிய ஊர்களில் குளங்கள் தூர்வாரும் பணி தி.மு.க இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது.
இதில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் இளைஞரணி துணை செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லது நடக்கவேண்டும் என எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தி.மு.க தான்.
அந்த வழியில் தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவுக்கு ஏற்ப கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 3 இடங்களில் குளம் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்படுகிறது.
இன்று தி.மு.க இளைஞரணி சார்பில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது எனத் தெரிந்தவுடன் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உத்தரவுப்படி இரவோடு இரவாக குளத்தை தூர்வார ஏற்பாடு செய்துள்ளனர். இதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. இது தி.மு.க இளைஞரணிக்குக் கிடைத்த வெற்றி.
மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இளைஞர்களை போராட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் சமூக சேவைக்கும் பயன்படுத்த வேண்டும் என தி.மு.க இளைஞர் அணி சார்பில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தூர்வாரும் பணிகளை தி.மு.க இளைஞரணி மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்கள் பணியைச் செய்துள்ளது வரவேற்கதக்கது. 14ம் தேதி முதல் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அமைச்சரும் வந்து உறுப்பினராக இணைந்து கொள்ளட்டும்” என அழைப்பு விடுத்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!