DMK
ரத்த தானம் அளிக்க, ரத்தம் பெற எந்நேரமும் செயல்படும் Mobile App : நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
குருதிக் கொடையை ஊக்குவிக்கும் வகையில் தி.மு.க மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் குருதி தான செயலி துவங்கப்படவுள்ளது.
தி.மு.க நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குருதி கொடை வழங்கிட, தி.மு.க மருத்துவ அணி சார்பில் புதிய “தி.மு.க. குருதி தான செயலி”யை (DMK blood donation App) நாளை (7-9-2019) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, தொடங்கி வைக்கிறார்.
அவசர காலத்திலும் - அறுவை சிகிச்சை - பல்வேறு மருத்துவ காரணங்களினால் குருதி தேவைப்படுபவர்கள், இந்தச் செயலி மூலம் தொடர்புகொண்டால், அவர்களுக்கு வேண்டிய இரத்த வகை உடனடியாக கிடைத்திட தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்து தரும்.
இந்தச் செயலி 24 மணிநேரமும் செயல்பட, அதற்கான வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். குருதி தேவைப்படுவோர் மட்டுமல்லாமல், குருதி தானம் அளிக்க விரும்புவர்கள், தி.மு.க மருத்துவ அணியின் தி.மு.க குருதி தான செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ அணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!