DMK
தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன்! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
தி.மு.க-வில் சமீபத்தில் இணைந்த தங்க.தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன் ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம், தங்க.தமிழ்ச்செல்வனை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., ஆகியோருடன் இணைந்து, கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாக தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், கழக சட்டதிட்ட விதி 31 பிரிவு 10அ-படி கழகத்தின் இலக்கிய அணி இணை செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜனும், கழக சட்டதிட்ட விதி 31 பிரிவு 12-ன்படி நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!