DMK
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் : டி.ஆர்.பாலு கோரிக்கை !
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என ஜூலை 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் அந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்தது.
தமிழ் மொழியையும் அப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை நீதிபதியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலித்து தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதியளித்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
Also Read
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!