DMK
குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலையும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் இல்லை என்கிற சூழ்நிலையுமே நிலவுகிறது.
அத்தியாவசியமாக உள்ள குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலில்படி பொதுமக்களோடு இணைந்து தி.மு.கவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
குடிநீர் பஞ்சத்தை போக்காத எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டம் நாளை (ஜூன் 24) காலை நடைபெறும் என சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!