DMK
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,
"விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான திரு ராதாமணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைந்தார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு ராதாமணி கண்டமங்களம் ஒன்றிய கழகச் செயலாளராக ஆறு முறையும், விழுப்புர மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றும் அவர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்பவர். தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர். அவரது மறைவு கழகத்தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
தொகுதி மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!