DMK
கலைஞர் பிறந்தநாள் அன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க பொதுக்கூட்டம்!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றி சாதித்துள்ளது. அதே போல 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு தேர்தல்களிலும் தங்களுக்கு வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்த தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 3-ம் தேதி மறைந்த தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளன்று தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜூன் 3 அன்று மாலை நடைபெற உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், தி.மு.க வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்று பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?