DMK
ஸ்டெர்லைட் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - கனிமொழி எம்.பி உறுதி!
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாற்றுவதற்கான காரணம் குறித்து நேற்று மனு அளித்திருந்தோம், தற்போது தேர்தல் ஆணையம் சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றும் போது அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அதேபோல் இது தவறான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி சம்பவம் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், சூழலியல் ஆர்வலர் முகிலன் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடமே பேசினார், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை எனக் கூறினார்.
Also Read
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!