DMK

மோடி வீட்டுக்கு செல்வது போல எடப்பாடியும் வீட்டுக்கு செல்வார் - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! 

சூலூர் தொகுதி திமுக வேட்பாளரை பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம். சூலூர் தொகுதிக்குட்பட்ட கணியூர், ராசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

"திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்யப்படும், நெசவாளர்கள் பிரச்சனை கலையப்படும், கேபிள் கட்டணம் குறைக்க படும், விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படும், என்று இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மோடி தான் செய்த கொடுமைகளால் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார். 4 தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு மூலம், ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் தலைவர் முதல்வராவார். எடப்பாடி முதல்வராக இருப்பதையும் தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களையும் தனது சாதனையாக சொல்கிறார். மோடி வீட்டுக்கு செல்வது போல எடப்பாடியும் வீட்டுக்கு செல்வார் - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

மக்கள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஓட்டு போடவில்லை. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என்பது இன்றும் மர்மமாக உள்ளது. சசிகலா காலில் தவழ்ந்து சென்று பதவியை வாங்கியவர் எடப்பாடி. மோடி வீட்டுக்கு செல்வது போல எடப்பாடியும் வீட்டுக்கு செல்வார்." இவ்வாறு கூறினார்.