DMK
மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவப்படைகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!