Cinema
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதில் பெரும்பாலான குற்றச்செயல்களில் தவெக-வை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறுமி வன்கொடுமை, ஏமாற்று வேலை என அனைத்து குற்றச்சம்பவங்களிலும் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது குறும்படம் எடுத்து தருவதாக ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலமும், தவெக பிரமுகருமான நடிகை வர்ஷினி வெங்கட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பைனான்ஸ் மற்றும் பங்குச்சந்தை தொழில்களைச் செய்து வருபவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தருண் (29). குறும்பட தயாரிப்பாளரான இவர், தொழில் காரணமாக கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்துள்ளார். இந்த சூழலில் தருணுக்கு, அவரது நண்பர் ஒருவர் மூலம் பிக்பாஸ் பிரபலமும், தவெக பிரமுகருமான நடிகை வர்ஷினி வெங்கட் அறிமுகமாகியுள்ளார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காரணமாக இருவரும் அடிக்கடி தருண் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து வந்துள்ளனர். இந்த சூழலில், தான் எடுக்கவுள்ள குறும்படத்தை தயாரிக்குமாறு வர்ஷினி தருணிடம் கேட்டுள்ளார். அவரும் யோசித்து சொல்வதாக சொன்னதாக கூறப்படும் நிலையில், மீண்டும் மீண்டும் வர்ஷினி, தருணிடம் உதவி கேட்டுள்ளார்.
இப்படியான சூழலில், கடந்த ஆக. 22-ம் தேதி தனது நண்பர்களுடன் வந்த வர்ஷினி, தருணுடன் தனியாக பேசுவதற்கு அழைத்துள்ளார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வர்ஷினியுடன் வந்த அவரது நண்பர் சஞ்சய் மற்றும் சிலர் தருணைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தருண் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வர்ஷினியும், சஞ்சயும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி தருணைத் தொடர்புகொண்ட வர்ஷினியின் நண்பர் சஞ்சய், வர்ஷினியின் வாழ்க்கை வீணாகிவிட்டதாகவும், அவருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும், கொடுக்கவில்லை என்றால் வர்ஷினியை வைத்து போலீசில் புகார் அளிப்பதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன தருணும், வர்ஷினியின் வங்கிக் கணக்குக்கு ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். எனினும் தருணை விடாத வர்ஷினியின் நண்பர், மீண்டும் அவரை தொடர்புகொண்டு மிரட்டி, ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்.16-ம் தேதி மீண்டும் தருணைத் தொடர்புகொண்ட சஞ்சய், ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு தருணும் கொடுக்க முடியாது என்று சொல்லவே, வர்ஷினியை வைத்து போலீசில் புகார் அளித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி தருண் இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தவெக பிரமுகர் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வர்ஷினி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தருணை மிரட்டிப் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் வர்ஷினி வெங்கட்டைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சஞ்சய் உள்ளிட்ட 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வாய் கிழிய ஒவ்வொரு பேட்டியிலும் பேசி வரும் தவெக பிரமுகர் வர்ஷினி வெங்கட், பெண் என்ற Victim Card-ஐ பயன்படுத்தி ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளது திரை வட்டாரத்தில் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?