Cinema

BB9: ''VJ பார்வதி கிட்ட பேசுறது செவுத்து கிட்ட பேசுற மாதிரி'' - கொந்தளிக்கும் காரக்குழம்பு கனி அக்கா!

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 தொடங்கி 1 வாரம் கடந்து விட்டது. watermelon star திவாகர், அரோரா, FJ , VJ பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, பிரவீன் குமார், கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, வியானா, வினோத், சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, கலையரசன், விக்ரம், கமருதீன் ஆகிய 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரு பேட்ஜ்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டார், super deluxe வீட்டார் என போட்டியாளர்கள் இரண்டாக பிரிந்தனர்.

இதில், நீல பேட்ஜை தேர்வு செய்த அரோரா, ரம்யா ஜோ, துஷார், பிரவீன் காந்தி, கானா வினோத், சுபிக்ஷா , கமுருதீன், நந்தினி ஆகியோர் super deluxe வீட்டிலும், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டின் சாதாரண அறையிலும் தங்கும் வகையில் பிரிந்தனர். super deluxe அறையில் இருப்பவர்கள், வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஆனால், மற்ற போட்டியாளர்களை வேலை வாங்க வேண்டும். super deluxe வீட்டார் அனைவருமே காலை எழுந்து வெளியில் வந்தால்தான் காலை பாடல் ஒலிக்கும், 7 நபர்களில் 4 பேர் மட்டுமே நாமினேஷனில் இடம்பெறுவர், வீட்டில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம். ஆனால், போட்டிக்கு judgement சொல்ல வேண்டும் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.

அத்துடன், வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு தண்ணீர் தேவையை புரியவைக்கும் விதமான ''தண்ணீர் தண்ணீர்'' என்ற weekly task நடத்தப்பட்டது. இதில், பிக்பாஸ் வீடு, super deluxe வீடு இரண்டிலும் இருந்து தலா ஒரு நபர்கள் என supervisor கமுருதீன் மற்றும் helper சபரி ஆகியோர் தேர்வு செய்யப்ட்டனர். மேலும், பிக்பாஸ் தரப்பில் வழங்கப்பட்ட நீரை கனி சமையலுக்கு பயன்படுத்தியது போன்ற விதி மீறல் காரணமாக தண்டனை வழங்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வியானா super deluxe வீட்டிற்கும், super deluxe வீட்டில் இருந்து துஷார் பிக்பாஸ் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

"தண்ணீர் தண்ணீர்" டாஸ்கில் பங்கேற்ற போட்டியாளர்கள் சபரி மற்றும் கமுருதீனுக்கு இது சற்று கடினமாகவே அமைந்தது எனலாம். ஏனெனில், இரவு, பகல் என பாராமல் எந்த நேரம் வேண்டுமாலும் தண்ணீர் திறந்து விடப்படும். அவ்வாறு வரும் தண்ணீரை 10 விநாடிக்குள் பிடிக்க வேண்டும் என்பதே விதி. இதில் சபரி சற்று பொறுப்புடன் செயல்பட்டாலும், கமுருதீன் அலட்சியத்துடன் தூங்கியதால் இரவில் தண்ணீர் வீணானது.

இந்த முறை சீசன் பெரிதும் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் முதல் 'வீட்டு தல' யார் என்பதை தேர்வு செய்வதற்கான நேரம் வந்தது. இதற்காக மூன்று கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில், முதலாவதாக போட்டியாளர்கள் அடுப்பில் பால் வைத்து பொங்க விட வேண்டும், பால் பாத்திரத்தின் விளிம்பு வரை பொங்க வேண்டும். ஆனால் அடுப்பில் வழிந்து விட கூடாது என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், கனி தவிர பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவருமே பங்கேற்க நிலையில் VJ பார்வதி, துஷார், ஆதிரை, கெமி, அப்சரா, சபரி மற்றும் நந்தினி ஆகியோர் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறினர்.

அடுத்ததாக, போட்டியாளர்களுக்கு அழுக்கு ஜீன்ஸ் வழங்கப்பட்டு அதை துவைத்து பிக்பாஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ள hangerஇல் தொங்கவிட வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அடிப்படை தேவையே தண்ணீர்தான், சரியான சமயத்தில் ஊடுருவிய பிக்பாஸ் குறும்படம் போட்டு போட்டியாளர்கள் 5 முறை தண்ணீரை வீண் செய்ததை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து 3வது டாஸ்க் தொடங்கப்பட்டு துஷார், பிரவீன் ராஜ் மற்றும் ஆதிரை ஆகியோர் அதில் பங்கேற்றனர். இதில், வாயை கட்டிக்கொண்டு பேசாமல் இருக்க வழங்கப்பட்ட துணியை துஷாரும், முகத்தை மூடிக்கொள்ள வழங்கப்பட்ட மாஸ்கை ஆதிரையும் மற்றும் வெள்ளை நிற uniform-ஐ பிரவீன் குமாரும் தேர்வு செய்தனர். இதில், super deluxe வீட்டார் பலரால் தெர்வு செய்யப்பட்ட துஷார், பிக்பாஸ் சீசன் 9-ன் முதல் 'வீட்டு தல'-யாக தேர்வானார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் முதல் வார நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில், வியனா, ஆதிரை, அப்சரா, பிரவீன்ராஜ், பிரவீன்காந்தி, திவாகர், மற்றும் கலையரசன் ஆகியோர் சக போட்டியாளர்களால் நோமின்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நான்காம் நாள் இரவு நேரத்தில் போட்டியாளர்கள் குழுவாக அமர்ந்து கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, நடந்த வேடிக்கையான உரையாடலில் நந்தினியை வைத்து சிரிக்கும்படி விமர்சித்து பேசப்பட்டது. இதனால் மனதளவில் புண்பட்ட நந்தினி பாத்ரூமிற்கு சென்று கத்தி அழுதார். இதன் தொடர்ச்சியாகவே, அடுத்த நாளும் சக போட்டியாளர்களால் மனதளவில் தடுமாறிய நந்தினி, “இங்கே யாரும் உண்மையாக இல்ல. என்னால இப்படி நடிக்க முடியாது” என்று அனைவரின் முன்னிலையிலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, பிக்பாஸிடமும் தனக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் இந்த வீட்டில் ஒரு வாரம் வழங்கிய தங்களது contribution குறித்து விசாரித்தார். இதனிடையே போட்டியாளர்கள் அவர்களது பெயர்களை முதலில் கூறும்படி கேட்டிருந்த விஜய் சேதுபதியிடம், ஆதிரை அமர்ந்தபடி தனது பெயரை கூறினார். அப்போது, "ஆதிரைக்கு மட்டும் ஏன் எழுந்திரிக்க முடியல'' என்று கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, தொடர்ந்து அவருடன் விவாதம் நடத்தினார். இந்த அதிரை விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் செயல் பலரிடையே சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

பொதுவாக, பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்தி, சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் விஜய் சேதுபதி, இந்த சம்பவத்தில் தன்னுடன் பேச வரும் பெண்கள் எழுந்து நின்று மரியாதையுடன் பேச வேண்டும் என்று கூறுகிறார். இந்தக் கருத்து, அவரது பொதுவான நற்பண்புக்கு முரணாக இருப்பதாகவும், பெண்களை மதிக்கும் அவரது முந்தைய நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும், பொது விவாதங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு, அவரது இந்தக் கருத்து பெண்களுக்கு எதிரான ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், பிக்பாஸ் வீட்டில் யாரும் 'ஓடவும் முடியாது-ஒளியவும் முடியாது' என்ற கமல்ஹாசனின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய விஜய்சேதுபதி, போன வாரம் இவங்க இருந்தது real-ஆ தெரியல; action cut மாதிரி இருந்தது என்று யாரை கூறுவீர்கள்? என்று சக போட்டியாளர்களிடம் வினவினார். இதில், watermelon star திவாகர் - FJ மற்றும் பிரவீன் குமாரை சுட்டிக்காட்ட, மீதி இருந்த அனைத்து போட்டியாளர்களுமே VJ பார்வதியின் நடவடிக்கை real ஆக தெரியவில்லை என்று கூறி இருந்தனர்.

அத்துடன், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில், ''யாருக்கு Followers அதிகம் ஆகி இருப்பாங்க? யாருக்கு Haters அதிகம் ஆகி இருப்பாங்க?'' என்று சக போட்டியாளர்களிடம் கேட்டார் விஜய் சேதுபதி. இதில், பெரும்பாலானோர் ''VJ பார்வதிக்கு Haters அதிகம் ஆகி இருப்பாங்க என்றும், watermelon star திவாகருக்கு Followers அதிகம் ஆகி இருப்பாங்க'' என்றும் கூறி இருந்தனர்.

இதையடுத்து, அனைவரும் எதிர்பார்த்திருந்த எவிக்‌ஷன் தருணம் வந்தது. வியானா, ஆதிரை, அப்சரா, பிரவீன்ராஜ், பிரவீன்காந்தி, திவாகர், மற்றும் கலையரசன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், முதலாவதாக அப்சரா மற்றும் கலையரசன் ஆகியோர் காப்பற்றப்பட்டு பிரவீன் காந்தி வீட்டில் இருந்து வெளியேறினார்.

மேலும், வீட்டில் ஏற்கனவே VJ பார்வதி மற்றும் watermelon star திவாகர் ஆகியோர் ஒர் அணியாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், விஜய்சேதுபதியின் சந்திப்பு முடிந்து இரவு நேரம் பிக்பாஸ் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்ட உணவை பகிர்ந்து உண்ணுவதில் VJ பார்வதிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீண்டும் உணவு தொடர்பாக சபரி மற்றும் watermelon star திவாகர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதே போல VJ பார்வதிக்கும், கனிக்கும் இடையே சலசலப்பு ஏற்பட, கிட்சன் மேடையின் மேல ஏறி அமர்ந்திருக்கும் பார்வதி, ''நா இங்க இப்படித்தான் உக்காருவேன், யாருமே இந்த கிட்சன் areaவுக்கு வரக்கூடாதுன்னு சொல்லுறது என்ன நியாயம்?'' என்று கனியிடம் கேட்கிறார்.

''super deluxe-க்கு எந்த கொம்பும் முளைக்கல! நீங்க அநியாயமா ஒரு விஷயம் பண்ணுவீங்க, ஆனா அத யாருமே கேட்ககூடாது, பாக்காமலே போய்டணுமா? அந்த அநியாயமும் பண்ணிட்டு என்னைய corner பண்ணுறாங்கனு scene create பண்ணுவீங்க நாங்க வாய மூடிக்கிட்டு போணும்னா அது யாராலயும் முடியாது. நல்ல அறிவு இருக்குறவங்களுக்கு உள்ள இறங்கும், புத்தி இல்லாதவங்களுக்கு உள்ள இறங்காது, செவுத்து கிட்ட போய் பேசுறா மாதிரிதான் உங்ககிட்ட பேசுறதும்'' என்று மிக கடுமையாக கனி பதிலடி கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் வீடு இரண்டாவது வார தொடக்கத்திலேயே சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், captain துஷார் என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் VJ பார்வதி மற்றும் watermelon star திவாகர் அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Also Read: BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!