Cinema
பொங்கலை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகும் அந்த 8 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் இதோ!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் படங்கள் வெளியாவது குறித்த பட்டியல் இதோ !
=> ஜன.10 :
* மெட்ராஸ்காரன் (Madraskaaran) :
ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான இது, நாளை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகிறது.
* வணங்கான் (Vanangaan) :
பாலா இயக்கத்தில் அருண் விஜய், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வணங்கான்' திரைப்படம் நாளை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகிறது.
* படை தலைவன் :
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘படை தலைவன்’ படம் நாளை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகிறது.
=> ஜன.12 :
* மதகஜராஜா (Madha Gaja Raja) :
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரும் ஜன.12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் பல்வேறு காரணங்களுக்காக வெளியீடு தள்ளிப்போன நிலையில், வரும் ஜன.12-ம் தேதி வெளியாகிறது.
=> ஜன.14 :
* நேசிப்பாயா (Nesippaya) :
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் 2-வது மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரும் ஜன.14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
* காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) :
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மெனன், யோகி பாபு, கொக்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜன.14, பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
* டென் ஹவர்ஸ் (Ten Hours) :
அறிமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள படம் டென் ஹவர்ஸ் திரைப்படம், ஜன.14, பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
* தருணம் (Tharunam) :
அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ’தருணம்’ திரைப்படம் ஜன.14, பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!