சினிமா

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் "வீட்டு ஆளுங்க வந்து சொன்ன feedback அன்பாவும், ஆழமாவும் இருந்தது" என தொகுப்பாளர் விஜய் சேதுபதி கூறும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் வீட்டில் கேப்டன்சி டாஸ்கில் நடைபெற்ற தில்லுமுல்லின் விளைவாக இந்த வாராத்திற்கான கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்திருந்தார் பிக்பாஸ். இதனால் போன வார கேப்டனாக இருந்த விஷாலே முன்வந்து வீட்டுப்பணிக்கு அணி பிரிப்பது பற்றி பேசினார். இதில் cooking team ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், அருண் மற்றும் விஷால்; vessel washing முத்து, பவித்ரா, ரயான், தீபக்; floor cleaning மற்றும் bathroom cleaning ஜெஃப்ரி, அன்ஷிதா, சௌந்தர்யா ஆகியோர் செய்வதாக கூறி தானாக முன் வந்தனர்.

மேலும் இந்த வாரம் audience pole-ல் மத்திய உணவை சௌந்தர்யா சமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதில் 12 பேருக்கு, 12 தக்காளி என தனது சமயலை தொடங்கிய சௌந்தர்யா போக போக மூக்குசளி குழம்பு என்ற dish-ஐ சமைத்து, "குழம்பு படு கேவலமா இருக்குன்னு எவனாவது சொல்லுவான், நம்பாத" என்ற முத்துவின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில், அன்ஷிதா, ஜெஃப்ரி, ஜாக்குலின், ராணவ், விஷால், மஞ்சரி, பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் 7000 points பெற்ற போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கு ஷாப்பிங் சென்றனர். மேலும் இந்த வாரம் பாச மழை பொழியும் வாரமாக அமைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கி 82 நாட்களை கடந்து விட்ட நிலையில் அனைத்து சீசன்களை போலவே இந்த சீசனிலும் freeze task நடைபெற்றது.

இதில் முதலாவதாக வீட்டிற்குள் வந்தது தீபக் மனைவி சிவரஞ்சனி மற்றும் அவரது மகன். இதில் பிக்பாஸ் வீட்டார் யார் மீதாவது முரண்பாடு இருந்தால் கூறலாம் என்ற வீட்டின் நபர்களுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் "அருண், தீபக பர்சனல் அட்டாக் செஞ்சிருக்கக்கூடாது... அவரை தனிப்பட்ட வகையில் உங்களுக்கு தெரியாது", என கூறி வருத்தப்பட்டார் தீபக் மனைவி. இதையடுத்து மஞ்சரியின் அம்மா பிரேமவாதி, சகோதரி யாகவி, சகோதரி கணவர் பிரேம் டாவின்சி மற்றும் மஞ்சரியின் மகன் நிலவ் ஆகியோர் வந்திருந்தனர். அருண், "நீங்க மஞ்சரியை தப்பா ப்ரொஜக்ட் பண்றீங்க" என்று இவர்களும் அருணையே சுட்டி காட்டினர். இதையடுத்து விஷாலின் குடும்பம் வீட்டிற்குள் வந்தது. இதில் முதலாவதாக விஷாலின் பாட்டி ராணி மற்றும் அம்மா சுலோக்சனா ஆகியோர் வீட்டிற்குள் வர அப்பா வரவில்லை என்று கேட்டு அழத்தொடங்கினர் விஷால். இதையடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வீட்டிற்குள் வந்தது விஷாலின் தந்தை முனிகுமார்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

இந்த முறையும் முரண்பாடு டாஸ்கில் மாட்டிக்கொண்டது அருண் தான். இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கும்பொழுதும் ஏன் சண்டை? என கேள்வி எழுப்பிய முனிகுமார், மஞ்சரியிடமும் ஏன் உங்களுக்கு விஷாலை பிடிக்கல என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கேப்டன்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே சண்டைக்கு காரணம் என அருண் விளக்கமளிக்க, person ஆ விஷாலை பிடிக்கும் player ஆ பிடிக்கல என கூறினார் மஞ்சரி. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து செல்லும் பாசமழை வாரமாக தொடர்ந்து. அந்த வரிசையில் அடுத்ததாக ரயான் குடும்பதிரான பாரதி, யுவஸ்ரீ மற்றும் ஜெனிஷா ஆத்விக் ஆகிய குழந்தைகள் வீட்டிற்குள் வந்திருந்தனர். ரயானுக்கு nomination free pass கிடைத்ததில் வீட்டிற்குள் ஏற்பட்ட சலசலப்பு இப்பொது மீண்டும் பெரிதாகியது, முரண்பாடு டாஸ்கில் இதனை சுட்டிக்காட்டினார் ரயானின் அக்கா.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

இதையடுத்து, சௌந்தர்யா வீட்டில் இருந்து அவரது அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் சௌந்தர்யா மீது இருந்த குறைகளையும் சுட்டிக்காட்டினர். குறிப்பாக சௌந்தர்யா தொடர்ந்து குடுக்கும் reaction, manager - labour டாஸ்கின் போது மீட்டிங்கில் காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டு சாப்பிட்டது போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து ராணவ் குடும்பத்தில் இருந்து சந்திரசேகர், வைஜெயந்தி, ஞானேஷ் மற்றும் ஏஞ்சல் ஆகியோர் வந்திருந்தனர். ராணவிற்கு கையில் அடிபட்ட பொழுது சௌந்தர்யா அவன் நடிக்கிறான் என்று கூறியது குடும்பத்தாராகிய எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்ததது என கூறினார் ராணவின் தங்கை.

அடுத்ததாக பவித்ராவின் குடும்பத்தில் இருந்து பானுப்ரியா, உதயகுமார், லிங்கேஷ் ஆகியோர் வந்திருந்தனர். மேலும், பவித்ராவின் அம்மா, பாட்டி ஆகியோர் குரல் ஒளிபரபரப்பட்டது. பவித்ராவின் குடும்பத்தினர் மஞ்சரி முட்டை தடவிய விஷயத்தை முரண்பாடாக கூறினர்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

அடுத்தத்த்தாக அன்ஷிதாவின் வீட்டில் இருந்து அவரது அம்மா குலாமி மற்றும் சகோதரர் அன்ஷில். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அத்துடன், அன்ஷிதா பாசத்தைக் காட்டி ஏமாத்தறா என்று ஜாக்குலின் சொன்னதை சுட்டிக்காட்டி அன்ஷிதா ஏமாத்தல உண்மையாத்தான் இருக்கா என்று கூறினார். மேலும் இந்த சீசனில் பிரபலமான சம்மந்தியை அன்ஷிதாவின் அம்மா அனைவருக்கும் செய்து தர வேண்டும் என அறிவித்தார் பிக்பாஸ்.

ஒரு ஒரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வெறும்போதும் தனது குடும்பத்தினராக இருக்குமோ என்ற அதீத எதிர்பார்ப்பில் வலம்வந்தார் ஜாக்குலின். எனினும் அடுத்ததாக வீட்டிற்குள் வந்தது, ஜெஃப்ரியின் அம்மா அப்பா. இவர்கள், "பாட்டுபாடறதே கொறஞ்சிருச்சு" என ஜெஃப்ரிக்கு அறிவுரை செய்ததுடன், அவன் தனியா வெளியாடுறன் டீம் மாறி இல்லை என கோவா gangகிடம் எடுத்துரைத்தார் ஜெஃப்ரி அம்மா.

இந்த தொடர்ச்சியாக வீட்டிற்குள் அருணின் அப்பா மதிவாணன் மற்றும் அம்மா மாலா உள்ளே வந்தனர். இவர்கள், பொம்மை டாஸ்கில் மஞ்சரி பொம்மை "தலையை திருகி போடணும்னு அருண் வெளயாட்டுக்குத்தான் சொன்னான், முத்து எதாவது பன்னிட்டு போய்டலாம்னு தோணுதுன்னு சொன்ன அளவுக்கு அது இல்லை" என எடுத்துக்காட்டுடன் விலக்கி இருந்தார். மேலும், அருணின் முடிவு எதுவாகினும் அது சரியாத்தான் இருக்கும் என கூறிய அவரது பெற்றோர் பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா மற்றும் அருணின் காதலுக்கும் பச்சை கொடி காட்டி சென்றனர்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

ஒரு ஒரு முறையும் தனது வீட்டார் வருகிறார்களா என ஆர்வத்துடன் எதிர்பாத்திருந்த ஜாக்குலினிற்கு, அவரது வீட்டில் இருந்து அம்மா நிர்மலா மற்றும் நண்பர்கள் சுபிகா, யுவராஜ் ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். மிகவும் உடைந்து பேசிய ஜாக்குலினிருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், முரண்பாடு டாஸ்கில் "ஜெஃப்ரிய ஜாக்குலின் தம்பி மாதிரிதான் பாக்குறா, அவ அழுகும் போது எல்லாம் தீபக் அவருக்கு ஆறுதல் சொன்னாங்க" என கூறினர்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் முத்துவின் அம்மா கலா மற்றும் அவரது அப்பா ஜெகதீஷன் ஆகியோர் வந்திருந்தனர். "அறிவான பிள்ளை, நல்லா விளையாடுற" என முத்துவை வாழ்த்திய பெற்றோர், முரண்பாடு டாஸ்கில், "விஷால், அருண் ஆகியோர் முத்துவிற்கு பின்னால் பேசுவதை விட முன்னாள் பேசுங்க" என அறிவுரை கூறினர். ஒருவழியாக அனைவரின் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர். இதனால் போட்டியாளர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

எனினும் மேலும் போட்டியாளர்களை மகிழ்விக்க எண்ணிய பிக்பாஸ் அடுத்ததாக வீட்டிற்குள் போட்டியாளர்களின் நண்பர்களை அனுப்பி வைத்தார். இதில் முதலாவதாக விஷால் மற்றும் பவித்ராவின் நண்பர்கள் ஷியமந்தா, நேஹா ஆகியோர் வீட்டிற்குள் வந்து செல்ல, அவர்களை தொடர்ந்து சௌந்தர்யா மற்றும் தீபக்கை காண முந்தைய சீசன் போட்டியாளர் விஷ்ணு, 'சிங்கம்' வெங்கட்ராஜ் ஆகியோர் உள்ளே வந்தனர். சுற்றி சுற்றி போட்டியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த விஷ்ணுவை தனியாக அழைத்து சென்றார் அருண்.

இதனிடையே விஷ்ணுவுக்கு marriage propose செய்ய முடிவு செய்த சௌந்தர்யா 'will you marry me' என்று எழுதி எடுத்து வந்து விஷ்ணுவிடம் வழங்கி தனது விருப்பத்தை தெரிவித்தார். இதுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சற்று தடுமாறிய விஷ்ணு இறுதியில் தனது சம்மதத்தையும் தெரிவித்தார்.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

இந்த வரிசையில் இறுதியாக உள்ளே வந்தவர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த அர்ச்சனா, அவருடன் ஈரோடு மகேஷும் உள்ளே வந்தார். அருணுக்காக அர்ச்சனா வந்தார் "உங்க அனைவருக்காகவும் நான் வந்திருக்கேன்" என்றார் ஈரோடு மகேஷ். இந்த வாரம் குடும்பத்தினர், நண்பர்கள் வருகையால் பிக்பாஸ் வீடே களைகட்டியது.

BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!

நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் வர இறுதி நாளான இன்று, "இங்க விளையாட்டுங்கறது நம்ம வீட்டு ஆளுங்க அவுங்களுக்குள்ள விளையாடிகிறது, அவுங்க வீட்டு ஆளுங்க வந்து ஒரு feedback குடுத்தாங்க அந்த feedback அன்பா இருந்தது, சில பேர் பேசினது ஆழமா இருந்தது. விளையாட்ட நேர்மையா விளையாட சொல்லுறாங்க, எல்லாம் நம்மக்கு புரிஞ்சது ஆனா வீட்டுல இருக்குற அவுங்களுக்கு புரிஞ்சுதான்னு தெரியலையே" என கூறி போட்டியாளர்களை சந்தித்துள்ளார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி. மேலும், போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூறிய கருத்தில் சக போட்டியாளர்களுக்கு வேறு எதுவும் கருத்துள்ளதா என்பதை விஜய் சேதுபதி விசாரிக்கும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories