Cinema
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
ஆண்டுதோறும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த திரைப்பட விழாவில் சர்வதேச அளவில் சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும். பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த படம் தேர்ந்தெடுக்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா சார்பில் திரையிடப்பட்ட சர்ச்சை படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பெருமளவு சர்ச்சையானது.
தொடர்ந்து இந்த ஆண்டு இந்த திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்படும் நிலையில், சிறந்த இணையத்தொடர் பிரிவில் தமிழில் வெளியான 'அயலி' தொடர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர்தான் 'அயலி'. மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், சிங்கம்புலி, லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அனைவரும் இதனை ஓடிடி தளத்தில் கண்டு ரசித்தனர்.
மூட நம்பிக்கையால் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி, பின்னர் அதிலிருந்து எப்படி வெளியேறுகிறார்கள் என்பதே கதையின் கருவாக அமைந்துள்ளது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த வெப் தொடர், திரை ரசிகர்கள், இணையவாசிகள் என பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த சூழலில் கோவாவில் நடைபெறும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு 'அயலி' பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
Also Read
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!