Cinema
தேவரா : “உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன்...” - மேடையில் கோர்வையாக தமிழில் பேசி நெகிழ்ந்த ஜான்வி கபூர்!
இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள படம்தான் ‘தேவரா 1’. தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக பழம்பெரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், சைஃப் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் படக்குழு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் என பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் கோர்வையாக தமிழில் பேசி அசத்தியுள்ளது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்வி கபூர் பேசியதாவது, “சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் எனக்கு எங்க அம்மாவோட இருந்த சிறந்த நினைவுகள் எல்லாமே சென்னையில்தான். அப்போது எனது அம்மா (ஸ்ரீதேவி) மீது நீங்கள் காட்டிய அன்புதான் இன்று நானும் என்னுடைய குடும்பமும் நல்ல நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணம். அதற்கு நான் உங்கள் எல்லோருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது அம்மாவுக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கு என்னுடைய உழைப்பை அதிகமாக கொடுத்திருக்கிறேன். தேவாரா எனக்கு ஸ்பெஷலான படம்” என்றார். இதையடுத்து “நீங்கள் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும்” என்று கேட்டபோது, “நானும் அதற்காக காத்திருக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார்.
ஜான்வி கபூர் கோர்வையாக பவ்வியமாக தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!