Cinema
மலையாள திரையுலகை உலுக்கும் பாலியல் சம்பவம் : நடிகர் நிவின் பாலி மீதும் பாய்ந்த வழக்கு !
தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர்தான் நிவின் பாலி. மலையாள நடிகரான இவர், நேரம், ரிச்சி போன்ற தமிழ் மொழி படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எல்லாவற்றுக்கும் மேலாக 'பிரேமம்' படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மேலும் பிரபலமாக அறியப்பட்டார். இவரது அசாதாரண நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் தற்போது பெண் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் கொடுத்த அந்த பெண், கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் திரைப்படம் ஒன்றின் கலந்துரையாடலுக்கு துபாய் ஹோட்டலுக்கு நிவின் பாலி உள்ளிட்டவர்களால் அழைக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கே சென்ற அவருக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது.
இதனை அந்த பெண் தற்போது புகாராக அளித்துள்ளார். அந்த புகாரில் சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாக கூறி நிவின் பாலி, தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் உள்ளிட்ட 6 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் ஏ.கே.சுனில் 2-வது குற்றவாளியாகவும், நிவின் பாலி 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மலையாள திரையுலகேயே தற்போது உலுக்கி வரும் நடிகைகள் மீதான திரை பிரபலங்களின் பாலியல் அத்துமீறல் விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையின் மூலம், நடிகைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகைகள் சிலர் வெளிப்படையாக புகார்கள் வைத்து வருகின்றனர். இந்த புகார்களின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் மோகன்லால், மலையாள திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அவருடன் சேர்ந்து 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மோகன்லால், மம்முட்டி என்று ஒரு சில நடிகர்கள் ஹேமா கமிட்டியின் புகாருக்கு நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!