Cinema
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி.. ரஜினி 170-வது படத்தில் இணைந்த பான் இந்தியா பிரபலங்கள்.. யார் யார் ?
ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது 170-வது படத்தை சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய டி.ஜே ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் அண்மையில் வெளியான நிலையில், தற்போது மேலும் அப்டேட்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் அனிருத் இணைந்துள்ளார்.
தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் கடந்த 3 நாட்களாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது இணையத்தை இந்த செய்தி தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி நடிகர்களும் இணைந்துள்ளனர். அதன்படி துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் ரஜினியின் 170 படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தில் இணைந்துள்ளார். சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும், அமிதாப் பச்சனும் திரையில் இணையவுள்ளனர். இதனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் கன்னட ஸ்டார் ஷிவ்ராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், இந்தி ஸ்டார் ஜாக்கி ஷ்ரோப் உள்ளிட்டோர் நடித்தனர்.
இந்த சூழலில் தற்போது ரஜினியின் 170-வது படத்திலும் இதுபோல் பான் இந்தியா அளவில் திரைக்கலைஞர்கள் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், எதிர்ப்பரப்பையும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!