Cinema
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடு.. Sex Education-ல் வரும் Otis வீடு விற்பனை.. ரசிகர்கள் அதிர்ச்சி !
தற்போதுள்ள காலத்தில் அனைவரும் ஓடிடி தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா காலத்தில் இதன் தேவைகள் மக்களுக்கு அதிகமாகவே இருந்தது. அப்போதில் இருந்து இப்போது வரை இதற்கான வாடிக்கையாளர் அதிகரித்த வண்ணமே இருக்கின்றனர். அதிலும் NETFLIX ஓடிடி தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
அதில் முக்கியமான சீரிஸ்களில் ஒன்றுதான் 'SEX EDUCATION'. 2019-ல் வெளியான இந்த தொடர் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இதனாலே இந்த தொடரின் 4-வது பாகம் அண்மையில் வெளியானது. இதில் Otis என்ற கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியமானது. இந்த இளைஞன் தனது சிங்கிள் தாயுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
சுமார் 4.52 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வீடு தற்போது விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் உரிமையாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 18-ம் நூற்றாண்டில் கட்டடப்பட்ட இந்த வீடானது 2002-ம் ஆண்டு ஒருவரால் வாங்கப்பட்டது. அவர் வாங்கி அந்த வீட்டை பணி செய்து பெயிண்ட் அடித்து, க்ரீன் ஹவுஸ், மரபலகையிலான கிட்சன், பாத்ரூம் உள்ளிட்டவையை சரி செய்தார்.
இங்கிலாந்தின் ஹியர்போர்ட்ஷைர் (Herefordshire) என்ற பகுதியில் வை நதிக்கரையில் (River Wye) அமைந்துள்ள இந்த வீட்டில் 5 பெட் ரூம், 3 பாத்ரூம் உள்ளிட்டவை உள்ளன. தற்போது இந்த வீடு 15 லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 15.15 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளம்பரத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்னரே Chalet என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SEX EDUCATION தொடரின் 4-வது பாகம் கடந்த செப். 21-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதுவே இதன் கடைசி பாகம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!