Cinema
மாரிமுத்து TO குணசேகரன்.. டப்பிங் போது மாரடைப்பு.. பிரபல நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை அடுத்துள்ள பசுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து. இளம் வயதிலே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு சென்னை வந்த இவர், ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் அஜித்தின் வாலி படம் தொடங்கி ஜெயிலர் படம் வரை குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மீம் டெம்ப்லேட்டாக வலம் வருகிறார். இந்த சூழலில் இன்று காலை 8.30 மணியளவில் எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் இவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழ் சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?