Cinema
திரைப்பட வளர்ச்சி கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை பார்வதி.. நடவடிக்கையின் பின்னணி என்ன?
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி திருவொத்து. 2006-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அரிமுகமான இவர், அதன்பிறகு தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க தொடங்கி விட்டார். தமிழில் கடந்த 208-ம் ஆண்டு வெளியான ‘பூ’ என்ற படத்தில் அறிமுகமனார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கவே தொடர்ந்து சென்னைஇல் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களுரு நாட்கள் உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.
மலையளத்தில் இவர் நடிப்பில் வெளியான Bangalore Days, சார்லி உள்ளிட்ட சில படங்கள் மாஸ் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தில் கழகத்தின் (KSFDC ) இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தார். அங்கே தனது பணியை நன்றாக செய்து வந்த இவர், தற்போது அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்வதி, அந்த கழகத்தின் இயக்குநர்குக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் தன்னை கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் தலைவர் ஷாஜி என்.கருன் உத்தரவிட இந்த கழகத்தில் இருந்து பார்வதி நீக்கப்பட்டார்.
KSFDC 1975-ம் ஆண்டு கேரள அரசால் தொடங்கப்பட்டது. நடிகை பார்வதி தன்னை விடுதிவிக்குமாறு கேட்டுக்கொண்டது எதனால் என்று தெரியவில்லை. எனினும் அவர் அதில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பார்வதி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!