Cinema
“சும்மா தெறிக்கும்.. காத்திருங்கள்.. ” : ரசிகர் கேட்ட கேள்விக்கு விஜய் 68 குறித்து வெங்கட் பிரபு பதில் !
தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் உருவான சென்னை 28 - 1&2, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் மாஸ் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் சிம்புவின் கம் பேக் படமாக கருதப்படும் 'மாநாடு' படம் வெளியானது. இது சிம்புவுக்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவுக்கும் கம் பேக் என ரசிகர்களால் கூறப்பட்டது.
இதனிடையே இவர் இயக்கிய படங்கள் சிலவை பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மாநாடு படத்துக்கு பிறகு இவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த சூழலில் இவர் விஜயின் 68-வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து வெங்கட் பிரபுவே 'கனவு நிஜமானது' என்று ட்வீட் செய்து போஸ்டரை வெளியிட்டார்.
அதன்படி விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது உறுதியானது. AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் 68 குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு மீசையை முறுக்கு புகழ் ஆனந்த் இயக்கத்தில் உருவான 'நண்பன் ஒருவன் வந்த பிறகு ' படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் 68 படம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "T68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்.. காத்திருங்கள்." என்று பதிவிட்டிருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!