Cinema
ஆதீரா TO ஆண்டனி தாஸ்.. முக்கிய கதாபாத்திரத்தின் அப்டேட்டை வெளியிட்டது LEO படக்குழு.. ரசிகர்கள் குஷி !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், சஞ்சய் தத், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைந்தது.
அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.
இதன் மீதி படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்தது. சுமார் 125 நாட்களில் இதன் படப்பிடிப்பை லோகேஷ் முடித்ததாக ரசிகர்கள் பாராட்டினர். வரும் அக்டோபர் மாதம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, லோகேஷ் கனகராஜ் இதன் ஒரு அப்டேட்டை வெளியிட்டார்.
அதன்படி இந்த படத்தில் திரிஷா சாகமாட்டார் என்றார். ஏனெனில் இந்த படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்கின்போது திரிஷா சில நாட்களிலே சென்னை திரும்பியதால் ரசிகர்கள் இந்த படத்தில் லோகேஷ் கொலை செய்து விட்டதாக கூறி ட்ரோல் செய்து வந்தனர். இந்த சூழலில் திரிஷாவுக்கு ஒன்றும் ஆகாது என்று லோகேஷே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்த Glimpse வீடியோ வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் சஞ்சய் தத், KGF 2 படத்தில் ‘ஆதீரா’ என்ற கதாபாத்திரம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்தார். தற்போது லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.
இந்த சூழலில் இன்று அவர் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இவரது காதாபாத்திரமான 'ANTONY DAS' கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பிரியா ஆனந்த், அர்ஜுன், அனுராக் காஷ்யப் என சில நடிகர்களின் பிறந்தநாள் இனி வரவுள்ளது. எனவே அடுத்தடுத்த கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!