Cinema
இளம் மாற்றுத்திறனாளி பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்.. குவியும் பாராட்டுகள்.. யார் இந்த சஹானா ?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரிகமப லிட்டில் சாம்பியன்' என்ற ரியாலிட்டி பாடல் ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் இளம் பாடகி சஹானா நிரேன்குமார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சஹானா தனக்குள் இருக்கும் திறமையை இந்த ஷோவின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். தொடர்ந்து பாடல்கள் மட்டுமின்றி இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக சஹானா இருக்கிறார்.
இவரது தனித்திறமை காரணமாகவே, அந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். மேலேயும் 1 நிமிடத்தில் அதிகப்படியான musical chords (இசை நோட்கள்) கூறியதற்காக அவரைப்பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவரது கெளரவித்தது. தொடர்ந்து இவர் தனது தனி திறமைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் சமூக வலைதள பக்கத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து, தனது திறமைகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வரவேற்பை பெற்று வருகிறார். பியானோவில் மிகவும் ஆர்வமாக இருக்கும் இவர், பல பாடல்களுக்கு தனது பியானோ மூலம் வாசித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். அதோடு விக்ரம் நடிப்பில் வெளியான 'தும்பி துள்ளல்' பாடலை தனது பியானோ மூலம் வாசித்தார். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் இவரை பாராட்டினார்.
தொடர்ந்து இசை மீதுள்ள ஆர்வத்தால் பல விஷயங்களை செய்து வரும் இவருக்கு, பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது அடுத்த படத்தில் பாடல் படுவதற்கு பாடகி சஹானாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 'சகா' படத்தை இயக்கிய இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகும் 'மழை' என்ற படத்தில் பாடகி சஹானா பாடல் ஒன்றை பாடுகிறார். இதனை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகி சஹானாவுக்கு தற்போது வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!