Cinema
அதிரடியாக 2 மொழிகளில் உருவாகும் ‘மாநாடு’ படத்தின் ரீ-மேக்.. நடிக்கப்போகும் பிரபலங்கள் யார் தெரியுமா ?
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் 'மாநாடு'. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், SAC உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. சிம்புவுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு கம் பேக் படமாக இது அமைந்திருந்ததாக ரசிகர்களும் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். டைம் லூப் பற்றிய கதையை கொண்ட இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இஸ்லாமியர்களை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த கதை, சூப்பர் என்டர்டெயினர் படமாக அமைந்திருந்தது. ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த படத்தை கண்டு களித்தனர்.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக படம் பெருமளவில் பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி உலக அளவில் சுமார் ரூ.120 கோடி வரை வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமாக திகழ்ந்தது. இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள், படக்குழுவினர் கொண்டாடினர். இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதன் தெலுங்கு ரீ-மேக் உரிமையை பிரபல நடிகர் ராணா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட விரும்புவதாக வெங்கட் பிரபு கூறியதாகவும், எனவே அதற்கான காஸ்ட் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த சூழலில் சிம்பு நடித்த கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் நடிக்கவும், எஸ்.ஜே. சூர்யா நடித்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் வருண் தவான் எதுவும் கூறவில்லை என்பதால், சிம்பு கதாபாத்திரத்தில் ராணாவே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. எனினும் இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!