Cinema

Hollywood-ஐ பார்த்தல் பயமாக இருக்கிறது.. இளம் Spider Man-ன் பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கும் நிறுவனங்கள் தான் மார்வெல் மற்றும் டிசி. இவர்கள் தான் உலகில் இருக்கும் ஒட்டுமொத்த சூப்பர் மேன் முதல் ஸ்பைடர் மேன் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கியது.

காமிக்ஸ் கதாபாத்திரமாக புத்தகத்தில் மட்டுமே இருந்த இவர்களுக்கு உயிர் கொடுத்தது என்றால் அது இந்த மார்வெல், டிசி என்ற இரண்டு பிரபல நிறுவனங்கள் தான். இதில் மார்வெல் நிறுவனத்தின் உருவாக்கம் தான் ஸ்பைடர் மேன். ஸ்பைடர் மேன் முந்தைய பாகங்களை தாண்டி கடந்த 2016-ல் Captain America: Civil War-ல் தோன்றிய ஸ்பைடர் மேன் தான் தற்போது இருக்கும் ஸ்பைடர் மேனாக அனைவரும் பார்க்கின்றனர்.

இளம் வயதிலே ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் செய்த முதல் நடிகர் என்றால் அது டாம் ஹலாண்ட் தான் (Tom Holland). Captain America: Civil War ஸ்பைடர் மேனாக நடித்த இவர், அதன்பின் மார்வெல் காமிக்சில் வெளியான Spider-Man: Homecoming, Avengers: Infinity War, Avengers: Endgame, Spider-Man: Far From Home, Spider-Man: No Way Home ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது முதல் ஸ்பைடர் மேன் படத்திலே ரசிகர்களை கவர்ந்த இவர், கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

2010-ல் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2016-ல் தான் பிரபலமானார். தற்போது 27 வயதாகும் டாம் ஹாலண்ட் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபல நடிகர்கள் பட்டியலில் இளம் வயது நடிகர்களில் முக்கியமான நபராக இவரும் இருக்கிறார். இந்த சூழலில் ஹாலிவுட் திரையுலகம் தனக்கானது இல்லை என்று தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டியில், "நான் சினிமா தயாரிப்பின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் எனக்கு ஹாலிவுட் பிடிக்கவில்லை; அது எனக்கானது அல்ல. அதனுடைய வியாபாரம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. நான் அந்த வியாபாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு தெரியும். ஆனால் அதை என்னிடமிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தவரை ஒரு சராசரி வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனக்கு முன்னால் வந்த பலரும் தங்களைத் தாங்களே இழப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த வியாபாரத்தால் எனது நண்பர்களை நான் இழந்துவிட்டேன்." என்றார்.

ஹாலிவுட் திரையுலகம் தனக்கானது இல்லை என்று நடிகர் டாம் ஹாலண்டின் பேட்டி அளித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாரதிராஜாவை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம்.. தமிழ் சினிமா உலகம் இரங்கல்!