Cinema
600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம் !
ரவீந்திரனான இவர் ஒரு மேடை நாடக கலைஞர் ஆவார். 1975 -ல் வெளியான Bhaaryaye Aavashyamundu என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி முதல் பலவகையான கேரக்டரில் நடித்துள்ள பூஜப்புரா ரவி, ஒரு தயாரிப்பாளரும் ஆவார். மலையாளத்தில் வெளியான கருப்பு - வெள்ளை திரைப்படங்களில் சிலவற்றை தயாரித்துள்ளார்.
இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து கொண்டார். இவர் மலையாள திரையுலகில் மூத்த பழம்பெரும் நடிகராக கருதப்படுகிறார். திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக 2016-ல் வெளியான Guppy என்ற படத்தில் சின்னப்பன் என்ற கதாபாத்திரத்திலும், Darvinte Parinamam என்ற படத்தில் பாதிரியாராகவும் நடித்திருந்தார்.
தற்போது 86 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக இடுக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் வைத்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!