Cinema
“என் செருப்பை பட்டப்பகலில் திருடிட்டாங்க..” - CCTV பதிவுடன் போலிசில் புகார் கொடுத்த தமிழ் பட நடிகை !
தமிழில் துணை நடிகையாக இருப்பவர் நடிகை சங்கீதா. இவர் விஜய் நடித்த மாஸ்டர், சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நவசித்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் விலையுர்ந்த காலணிகளை வாங்கி தனது வீட்டின் வாசலில் வைத்துள்ளார். ஆனால் இவரது காலணி தொடர்ந்து மாயமாக மாறியது. இதனால் சந்தேகமடைந்த சங்கீதா தனது வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார். அப்போது அதில் 2 இளைஞர்கள் பட்டப்பகலில் பைக்கில் வந்து அவரது செருப்புகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இதுகுறித்து சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இதுக்குறித்து வீடியோ ஒன்றையும் சங்கீதா வெளியிட்டிருந்தார். அதில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட சங்கீதா, ஏதோ திருடுவதற்காக இங்கு வந்த 2 திருடர்கள், எதுவும் கிடைக்காமல்என் வீட்டில் இருந்த விலை உயர்ந்த செருப்பைகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது செருப்பை 2 மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி விட்டதாக பிரபல நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!