Cinema
தொடர் மரணம்.. பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார் !
அண்மைக்காலமாக திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள் உயிரிழந்து வரும் செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட உடல்நலக்குறைவால் நடிகர் மனோபாலா காலமானார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதார். இந்த சூழலில் துணை நடிகரும், காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவருமான செவ்வாழை ராசுஉடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இவர் திரைத்துறையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 1993-ல் வெளியான 'கிழக்கு சீமையிலே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், அதன்பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருந்தார். பின்னர் கடந்த 2007-ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமானார்.
வெறும் குணச்சித்திர கதாபாத்திரங்களில், சைடு ரோலில் மட்டுமே நடித்துள்ள இவர், சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியான 'கந்தசாமி', 'மைனா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர், அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். எனவே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திரையுலகில் ஏற்படும் இதுபோல் துயர சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!