Cinema
“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !
பிரபல இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா - தி ரைஸ்'. கடந்த 2021-ல் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா 'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் குவித்தது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், ராஷ்மிகாவை விட மேலும் நன்றாக நடித்திருப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'ஃபர்ஹானா'. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் அண்மையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்த இவர், விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என்றார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார்; இருப்பினும் எனக்கு கிடைத்திருந்தால் ராஷ்மிகாவைவிட மிகவும் அருமையாக நடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!