Cinema
அப்போ ‘ஜெயிலர்’.. இப்போ ‘லால் சலாம்’.. - ரஜினி படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வழங்கும் படக்குழு !
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குநர் ஆவார். தனுஷை திருமணம் செய்த பிறகு கடந்த 2012-ல் வெளியான '3' என்ற படத்தை இவர் இயக்கினார். இந்த படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தரவே, தொடர்ந்து 2015-ல் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்தின் மகள் என்பதே இவருக்கு ஒரு அடையாளமாக இருக்க, தன் திறமையின் மூலம் அங்கீகாரம் பெற விரும்பி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக இன்று மும்பை சென்றுள்ளார் ரஜினி.
ரஜினிகாந்த் மும்பை செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ புகைப்படம் வெளியாகி பெரும் வைரலாக நிலையில், லால் சலாம் படத்தின் அட்டகாசமான அப்டேட் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள ரஜினியின் கதாபாத்திர பெயரை படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெளியீட்டு தேதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரஜினி படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!