Cinema

சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ள ஆந்திர ரசிகர்.. ‘இப்படியும் ஒரு மனிதரா?’ காரணத்தை கேட்டு வியந்த ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர் 'மாஸ்கோவின் காவேரி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவருக்கு, அங்கு அநேக வாய்ப்புகள் கிடைத்து. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு, தமிழில் விஜயுடன் நடித்த 'கத்தி' படம் பெரும் பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து மேலும் பிரபலமானார்.

தமிழ், தெலுங்குவை தொடர்ந்து இந்தியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் காதல் உறவு சில ஆண்டுகளிலே முடிவுக்கு வந்து 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் பறிந்து தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த பிரச்னை காரணமாக நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் வெளியானது. பெரிய அளவு இவருக்கு தோல்வியை கொடுத்த இந்த படம், விமர்சங்களுக்கும் உள்ளானது.

இந்த சூழலிலும் கூட இவருக்கு உறுதுணையாக அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வருகிறார். ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

முன்னதாக நடிகை குஷ்பூ, நிதி அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோயில் கட்டியிருக்கும் நிலையில், தற்போது சமந்தாவுக்கும் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ரசிகர் சந்தீப் கூறுகையில், "சமந்தா பிரத்யூக்ஷா அறக்கட்டளை மூலம் நடிகை சமந்தா சேவை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட எண்ணினேன். அதன்படி எனது வீட்டின் ஒரு பகுதியை இதற்கு என்று ஒதுக்கி கோயில் கட்டி உள்ளேன். இது இன்றுடன் நிறைவடைகிறது. நாளை சமந்தாவின் பிறந்தாநாள் என்பதால் இதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது" என்றார். இது தற்போது திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Also Read: விடாத பழக்கம்.. ஷூட்டிங்கில் தகராறு: இனி நடிக்க கூடாது.. 2 நடிகர்களுக்கு தடை விதித்த மலையாள திரையுலகம் !