Cinema
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!
மலையாள சினமா உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் மாமுக்கோயா. இவர் நேற்று மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் அவரை மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அப்போது மாமுக்கோயா திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மாமுக்கோயாவுக்கு மலையாள சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். 'தூர் தூரே ஒரு கூடு கூட்டம்', 'காந்திநகர் இரண்டாவது தெரு', 'நாடோடிக்காட்டு', 'வடக்குநோக்கியந்திரம்', 'கிரீடம்', 'பட்டணப்பிரவேசம்', 'உன்னிகளே ஒரு கதைப் பராயம்', 'ஒப்பம்', 'ஒருவர்' ஆகியவை அவரது பிரபலமான படங்கள்.
இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழில் 'அரங்கேற்றவேளை', 'காசு','கோப்ரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Also Read
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!