Cinema
“கவர்ச்சியாக இருக்கிறாய்..” அத்துமீறிய பிரபல தொழிலதிபர்.. பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை !
பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ஷெர்லின் சோப்ரா. தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர், மாடல் அழகியாவார். இந்தி பிக் பாஸ் 3-லும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், அவ்வப்போது சில பிரச்னைகளையும் ஏற்படுத்தி வருவார்.
அந்த வகையில் அண்மையில் பாலிவுட் மற்றொரு கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்துக்கும் இவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. பின்னர் அவர்கள் சமரசமாகி ராக்கி இவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பிரபல தொழிலதிபர் மீது ஷெரிலின் மும்பை ஜூஹூ போலீசில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், "கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடல் ஒலிப்பதிவுலாக ஸ்டூடியோ ஒன்றுக்கு சென்று பின்னர் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது அங்கே வந்த மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராக இருப்பவர் சுனில் பரஸ்மானி லோதா, தான் ஒரு ஆல்பம் பாடலை உருவாக்க போவதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நானும் அதற்கு சம்மதிக்க, சிறிது நேரத்துக்கு பிறகு அவர் என்னை மிகவும் பாராட்டி பேசியதோடு கவர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். நானும் நன்றி என்று கூறி சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பவே, அவர் தனது கார் பிரச்னை என்றும், தன்னை ஒரு இடத்தில் இறக்கி விடுமாறும் கூறினார். பின்னர் நானும் அவரும் எனது காரில் பயணம் செய்தோம். அப்போது எனது வீடு வந்ததும், நான் இறங்கவே அவரை கொண்டு விடுமாறு எனது டிரைவரிடம் கூறினேன்.
அப்போது எனது வீட்டை பார்க்க ஆசைப்பட்டு அவர் கேட்கவே நானும் அவரை உள்ளே அழைத்து சென்றேன். அப்போது எனது அறையில் நான் இருக்கும்போது அவரு உள்ளே நுழைந்து பேச்சுவாக்கில் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதோடு நான் அவரை தள்ளிவிட முற்பட்டபோது, கவர்ச்சியாக இருப்பதாக கூறி, அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று மீண்டும் அத்துமீறினார்.
பின்னர் அவரிடம் கத்தி கூச்சலிட்டு மிரட்டி வீட்டை விட்டு வெளியே செல்ல கூறியபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா மீது 3 பிரிவுகளீன் கீழ் ஜூஹூ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!