Cinema
“சாகசம் தொடக்கம்..” இலியானா கொடுத்த Surprise செய்தியால் உறைந்துபோயிருக்கும் ரசிகர்கள்.. என்னவா இருக்கும்?
கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கு படமான தேவதாசு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் பெயரை பெற்றார். அந்த படம் மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில், தமிழில் 2006-ல் வெளியான 'கேடி' என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலே இவருக்கு தமன்னா வில்லியாக நடிக்க, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், கன்னட படத்திலும் நடித்தார். சுமார் 2012-ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். தமிழில் பெரிய அளவில் இவருக்கு பெயர் கொடுத்த இந்த படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
அதன்பிறகு தற்போது வரை தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்களுக்கு தன்னை பற்றி அப்டேட்கள் வழங்கி வருவார். தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர், ஆல்பம் சாங்கிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரும், இலியானாவுக்கு காதலித்து வந்ததாகவும், அவருடன் லிவ்விங் உறவில் இருந்து வந்ததாகவும் செய்திகள் பரவின. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பிரிந்ததாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனும் இவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும், மாலத்தீவில் இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து இலியானா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த சூழலில் தான் அம்மாவாக போறதாக இலியானா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் புகைப்படங்களையும், பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு - வெள்ளை நிற குட்டி டி-ஷர்ட்டும், அந்த டி-ஷர்ட்டில் "And so the adventure begins" (ஒருவழியாக சாகசம் தொடங்கியது) என்று எழுதப்பட்டுள்ளது; மற்றொரு புகைப்படத்தில் 'Mama' (அம்மா) என்ற செயினை அவர் அணிந்திருப்பது போன்றும் உள்ளது.
மேலும் "விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் தாயாக போவது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் 'எப்புட்றா' என்பது போல் வியப்பில் உள்ளனர். ஏனெனில் தற்போது 35 வயதுடைய இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
எனவே ரசிகர்கள் ஒரு பக்கத்தில் குழப்பத்திலும் உள்ளனர். எனினும் விரைவில் இவர் கர்ப்பமாக இருக்கிறாரா? அல்லது வாடகை தாயின் மூலம் ஏதேனும் குழந்தையை பெற்றுக்கொள்ள இருக்கிறாரா என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!