Cinema
காரின் பின்னால் ஓடி வந்து கோரிக்கை வைத்த ரசிகை.. உடனே OK சொன்ன மஞ்சுவாரியர்: அப்படி என்ன சொல்லிருப்பாங்க?
மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால், மலையாளத்தில் அது மஞ்சு வாரியர். 1995-ல் மலையாள திரையுலகில் நடிக்க தொடங்கிய இவர், மோகன்லால், மம்முட்டி, ப்ரித்விராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சோலோவாகவும் நடித்து மிகப்பெரிய பெயர் பெற்றுள்ளார். இவரது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் சிறந்தவராக விளங்குகிறார். மலையாளம் மட்டுமல்லாது, தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அசுரன் படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது தொடர்ந்து மலையாளத்தி நடித்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் தோன்றினார். தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். அங்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு அளிப்பர்.
அந்த வகையில் அண்மையில் மஞ்சு வாரியர் கொச்சியில் உள்ள ஈரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். அங்கே நிகழ்ச்சி முடித்து விட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மஞ்சு வாரியர் காரின் பின்னால் இளம்பெண் ரசிகை ஒருவர் ஓடி சென்றுள்ளார். இதனை கண்ட மஞ்சு, உடனே காரை நிறுத்தக்கூறி அந்த பெண்ணிடம் என்ன என்று விசாரித்தார்.
அப்போது அந்த பெண், “என் அம்மா உங்களோடு தீவிர ரசிகை. இன்னைக்கு அவங்களுக்கு பிறந்தநாள். நீங்க அவங்களுக்கு ஒரு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்” என கூறினார். இதனை கேட்டு ஆனந்தம் அடைந்த மஞ்சு உடனே, தனது உதவியாளரிடம் அந்த பெண்ணின் போன் எண்ணை கொடுக்க கூறினார். மேலும் தான் நிச்சயமாக அம்மாவிடம் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மஞ்சு வாரியருக்கு பாராட்டுகள் பெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மஞ்சு வாரியரின் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!