Cinema
மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ்.. ஆனால் இந்த முறை வேறு மாதிரி.. கர்ணன் வெளியான அதே நாளில் Update !
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். தனது தனித்திறமையினால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர், ஒரு நடிகர் மட்டுமல்லாது; தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகரும் ஆவார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் மட்டுமல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் வெளியான படம்தான் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். தொடர்ந்து அடுத்ததாக இவரது சகோதரன் செல்வராகவன் இயக்கத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம்தான் 'நானே வருவேன்'. பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை என்றாலும், சைக்கோ திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
திருச்சிற்றம்பலம் ஹிட் கொடுப்பதற்கு முன்னாள் அவருக்கு இறுதியாக ஹிட் கொடுத்த படம்தான் 'கர்ணன்'. 'பெரியேறும் பெருமாள்' படம் மூலம் பிரபல இயக்குநராக அறியப்பட்டவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலே தமிழ்நாட்டு திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து அடுத்த படமே தனுஷை வைத்து இயக்கினார். அந்த படம் தான் 'கர்ணன்'.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படமான இந்த படம் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தின் தனுஷ், நட்ராஜ், லால், யோகி பாபு, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பாராட்டப்பட்டது. "வுட்றாதீங்க எம்மொ..", "கண்டா வரச்சொல்லுங்க.." பாடல்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது.
தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ள 'மாமன்னன்' படம் நிறைவடைந்ததையடுத்து அதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாரி செல்வராஜ் தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு நடிகர் தனுஷ் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த அப்டேட்டை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே 3, எதிர் நீச்சல், காக்கா முட்டை, வேலை இல்லா பட்டதாரி 2, நானும் ரெளடி தான், மாரி, காலா, வட சென்னை என 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தயாரிப்பாளராக தனது 15-வது படத்தை மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளார். இன்று வெளியான இந்த அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் ஆவலை கொடுத்துள்ளது. ஏனெனில் கடந்த 2021-ம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 9-ம் தேதி) கர்ணன் படம் வெளியாகியது. கர்ணன் வெளியான அதே நாளில் மீண்டும் இவர்களது கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!