Cinema

“மூளையை கழட்டி வச்சுட்டுதான் நடிக்க வேண்டி இருக்கு..” - தென்னிந்திய படங்களை விமர்சித்த வில்லன் நடிகர் !

இந்திய சினிமாவில் பிரபல வில்லனாக இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் ராகுல் தேவ். டெல்லியை சேர்ந்த இவர் இந்தியில் அறிமுகமானார். 2001-ம் ஆண்டு தமிழில் விஜய் காந்த் நடிப்பில் வெளியான 'நரசிம்மா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கிலும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார்.

இந்தியில் இவர் படங்கள் நடித்தாலும், தென்னிந்தியாவில் இருந்து தெலுங்கு மொழி படங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஒடியா உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் மழை, அரசாங்கம், ஆதவன், ஜெய் ஹிந்த் 2, 10 எண்றதுக்குள்ள, வேதாளம், தி லெஜெண்ட் உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.

இருப்பினும் இவர் இந்தியில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் 'Gaslight' என்ற படம் வெளியானது. இந்த படம் வெளியீட்டுக்கு பின்னர் தனியார் ஊடகத்துக்கு வரிசையாக பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் தென்னிந்திய படங்களை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகர் ராகுல் தேவ் பேசியதாவது, "தென்னிந்திய படங்களில் நிஜ வாழ்க்கைக்கு துளியும் சம்பந்தமில்லாத சண்டைக்காட்சிகளை காண்பிக்கிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. ஒரே போன்ற கதையாக இருந்தாலும் அதனை பார்வையாளர்களை கவரும் வகையில் சொல்வதால் அதற்கு வரவேற்பு இருக்கிறது. அவர்கள் 70's 80's டெம்ப்ளட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

நான் படித்த குடும்ப பின்னணியில் இருந்து வருபவன். பிரம்மாண்ட படங்களில் நடிக்கும்போது எனது மூளையை வீட்டில் வைத்துவிட்டுதான் வரவேண்டும். தென்னிந்திய படங்களில் உரையாடல்களை நடிகர்களின் சண்டை காட்சிகள் பெரிய அளவில் காணப்படும். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லை.

நிஜ வாழ்க்கையில் 2 பேர் சண்டையிட்டார்கள் என்றால் அவர்கள் தங்கள் சட்டையை கழட்டி உடலைக் காட்டுவார்களா? பெரும்பாலானோர் இதனை விரும்புகிறார்கள். இங்கு எது சரி என விமர்சிக்க நாம் யார்? இது இயக்குநரின் திறமை சார்ந்தது" என்றார்.

Also Read: “நா அப்படி சொல்லவே இல்ல..” : நாக சைதன்யா - சோபிதா Dating விவகாரம் குறித்து சமந்தா கூறியது என்ன ?