Cinema
நிர்வாண காட்சியில் நடிப்பது பற்றி முன்னரே எதுவும் சொல்லவில்லை.. -விடுதலை பட நடிகை பேட்டி !
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 31-ம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரி தனது வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வெற்றியின் மூலமே சூரி இனி காமெடி வேடங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த படத்தின் நடித்த நடிகர்கள் நடிகைகள் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த படத்தில் நடித்த நடிகை தென்றல் ரகுநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தான் நிர்வாணமாக நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது இந்த படத்தின் ஒரு காட்சியில் இந்த நடிகை ஆடைகளின்றி நிர்வாணமாக நடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தென்றல் ரகுநாதன், "வெற்றிமாறன் சார் செங்கல்பட்டில் படப்பிடிப்பில் இருந்தார். இரவு 7 மணி அளவில் அவரை சந்தித்து பேசினேன். சரிமா சொல்றேன், வந்துடுங்க என்றார். வசனம் பேசுங்க என்று எல்லாம் சொல்லவில்லை. மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
இந்த படத்தில் நடிக்கும் போது முதலில் எனக்கு எந்த கதாபாத்திரம் என்று தெரியாது. வெற்றிமாறன் சாரின் படம் என்பதால் நானும் அது பற்றி எதுவுமே கேட்கவில்லை. என்னிடம் முதலில் நிர்வாண காட்சியில் நடிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. படப்பிடிப்பு தளத்தில் வைத்துதான் காவல் நிலைய காட்சிகளில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு அப்போது எந்த ஒரு பயமோ தயக்கமோ ஏற்படவில்லை.
நான் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவே உணர்ந்தேன். படப்பிடிப்பில் உண்மையில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. CG-யில் எடிட் செய்துதான் அதுபோல் திரையில் காட்டப்பட்டுள்ளது. எனக்கு இந்த படத்தில் என்ன காதாபாத்திரம் என்று கூட தெரியாது. டப்பிங் பேசும்போது தான் நான் ஹீரோயினின் அம்மாவாக நடித்துள்ளேன் என்பதே எனக்கு தெரியும்." என்றார்.
Also Read
-
அமெரிக்காவில் நாடு கடத்தப்படும் இந்தியர்களின் நிலை என்ன? : கனிமொழி MP கேள்வி - ஒன்றிய அமைச்சர் பதில்!
-
”கல்வி மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்போம்” : The Hindu-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரை!
-
”மக்கள் பணியை செய்தால் அதுவே எனக்கு உடல் நலத்தை கொடுத்துவிடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் : மருத்துவ முகாம்களில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் என்ன?
-
வெறுப்பை விதைக்கும் படத்திற்கு அங்கீகாரமா? : கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கண்டனம்!