Cinema
அன்று தந்தை வருத்தம்.. இன்று மகள் ஒப்பந்தம்: கதாநாயகியாக களமிறங்கும் போனி கபூரின் 2-வது மகள் | Love Today
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.
இவனா, பிரதீப் ரங்கநாதன், ரவீனா ரவி, யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். AGS நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளே உலக அளவில் மொத்தம் ரூ.6 கோடியம், தமிழ்நாடு அளவில் ரூ.4 கோடி வசூல் செய்த நிலையில், சுமார் ரூ.100 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.
கடந்த ஆண்டில் டாப் தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் இது டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இப்படம், இளைஞர்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அதில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகவும், இதனை டேவிட் தவான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து "லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை” என போனி கபூர் மறுப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். இதையடுத்து இதுகுறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், இது குறித்து உறுதியான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானும், போனி கபூர் - ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகளான குஷி கபூரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இதன் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு போனி கபூர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 2-வது மகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இதன் மூலம் குஷி கபூர் முதன்முறையாக திரையுலகில் அறிமுகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!