Cinema

LEO Update : காஷ்மீரில் மைனஸ் 12 டிகிரியில் படப்பிடிப்பு.. சென்னை திரும்பிய மிஷ்கின் என்ன சொல்கிறார் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.

அனிருத் இசையமையத்திற்கு இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் பெரிய திரைபட்டாளமே நடித்து வருகிறது. இதில் காஷ்மீரில் சில நடிகர்களின் காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு செய்யப்படுகிறது. அதில் விஜய், பிரியா ஆனந்த், திரிஷா, மிஸ்கின் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். அங்கு அதிக டிகிரி குளிரிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மிஸ்கின் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்றும் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர் என்றும் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு மிகச்சிறந்த ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள்.

மேலும் உதவி இயக்குநர்களில் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என நெகிழ்ந்த மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான் அவன் நெற்றில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: Nepotism: “இவர்கள்தான் ஊக்குவிக்கிறார்கள்..” - ராம் சரண் குறித்து நானியின் கருத்தால் டோலிவுட்டில் பரபர !