Cinema
“என்னை மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்தார்..” பிரபல இயக்குநர் மீது இளைஞர் புகார்: கேரள திரையுலகில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தீப்தா (37). இவர் வளர்ந்து வரும் ஒரு பெண் இயக்குநர் ஆவார். இவர் 'Yessma' என்ற ஓடிடி தளத்திற்கு சீரிஸ் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் 'Nancy' என்ற வெப் தொடர் ஒன்று வெளியானது. இது வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.
முழுக்க முழுக்க 18+ கன்டென்டாக இருக்கும் இந்த சீரிஸ் மலையாள திரையுலகில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் அடுத்ததும் சீரிஸ் ஒன்று இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதுகுறித்து செய்திகள் பெரிதளவில் வெளியில் பேசப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த இயக்குநர் மீது இளைஞர் அருவிக்கரை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது அவர் அளித்த புகாரில், "என்னை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வெப்தொடரில் நடிக்க லட்சுமி தீப்தா குழுவினர் அணுகினர். அதில் எனது கதாபாத்திரம்தான் கதாநாயகன் என்று கூறியதால், நானும் அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். பின்னர் இதற்கு படப்பிடிப்பு தொடங்கியது.
பல நாட்கள் கழித்துதான், இது ஒரு ஆபாச சீரிஸ் என்று எனக்கு தெரிய வந்தது. இதனால் நான் இதில் நடிக்க மறுத்தேன். ஆனால் அவர்கள் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறி என்னை மிரட்டி நடிக்க வைத்தனர். இப்பொது அந்த சீரிஸ் வெளியே வந்தால் எனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே அந்த சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இயக்குநர் லட்சுமி தீப்தா கைது செய்யப்பட்டு நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் தனக்கு ஜாமீன் கேட்டு தீப்தா விண்ணப்பித்ததையடுத்து, அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது தற்போது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்த மருத்துவம் படித்து முடித்திருக்கும் இயக்குநர் லட்சுமி தீப்தாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் பால்பாயாசம், செலின்டே டியூசன், நான்சி ஆகிய தொடர்களை கடந்த 2022-ம் ஆண்டு இயக்கியுள்ளார். தற்போது 'ஹோப்' என்ற தொடரை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!