Cinema
“காசு கூட கொடுக்காம துபாயில் தனியாக விட்டு போய்ட்டார்..” 'பேட்ட' பட வில்லன் மீது பணிப்பெண் பரபர புகார்..
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் நவாசுதீன் சித்திக். 1999-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்தி மட்டுமின்றி பிற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் கூட கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார்.
அதில் 'சிங்காரம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு தமிழ்நாட்டு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவர் 2009-ம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரை திருமணம் செய்த நிலையில், இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்றது. அஞ்சனா - ஆலியா சித்திக் ஆனார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2020-ல் விவகாரத்து பெற்றனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், தனது கணவன் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், ஆலியா சித்திக் புகார் அளித்திருந்தார். இந்த பிரச்னை இன்னும் முடியாத நிலையில், நவாசுதீன், தனது குழந்தைகளை கவனித்துக்கொள்ள அமிர்தசரஸைச் சேர்ந்த சப்னா என்ற இளம்பெண்ணைக் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் துபாய் கூட்டி சென்றிருந்தார். பின்னர் சிறிது வேலை இருப்பதாக கூறி மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
அதன்பிறகு 2 மாதங்கள் கழித்து குழந்தைகளும் இந்தியா வந்துள்ளனர். பின்னர் சப்னாவை தொடர்பு கொள்ளாத நவாசுதீன், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதை நிறுத்தியுள்ளார். அதோடு அவருக்கு பணமும் கொடுக்கவில்லை. பணியில் சேர்ந்த முதல் மாதம் மட்டும் சம்பளம் கொடுத்த நவாசுதீன், மறு மாதத்தில் இருந்து காசு கொடுப்பதை நிறுத்தியுள்ளார். சப்னாவும் நவாசுதீனிடம் காசு கேட்டபோது, விசா கட்டணத்தில் கழித்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதனால் செய்வதறியாது திகைத்த சப்னா, ஆலியாவிடம் வீடியோ கால் மூலம் கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ட்விட்டரில் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னரே உள்ளூர் நிர்வாகம் சப்னாவுக்கு உதவி செய்திருக்கிறது. மேலும் சப்னாவை இந்தியாவுக்கு அழைத்துவர நவாசுதீன் சித்திக் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆலியாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவும், பதிவையும் வெளியிட்டுள்ளார். இதன்மூலமே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!