Cinema
#LGM || கிரிக்கெட் சாம்பியன் யோகி பாபுவுக்கு தனது கிரிக்கெட் பேட்டை கொடுத்த MS தோனி.. - காரணம் என்ன ?
கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது வாரிசு, அயலான், சலூன், பூமர் அங்கிள் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். யோகிபாபு தமிழ் திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'பொம்மை நாயகி' கலவையான விமர்சனம் பெற்றது. இப்படி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார். படப்பிடிப்பில் கூட படக்குழுவுடன் சேர்ந்து அவ்வப்போது கிரிக்கெட் ஆடி மகிழ்வார்.
முன்னதாக நடிகர் யோகி பாபு தனது பள்ளி காலத்தில் கிரிக்கெட்டில் மாநில அளவில் வெற்றிபெற்று சாம்பியனாக பட்டம் பெற்றுள்ளார். இதனால் கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த இவர், தனது கிரிக்கெட் ஆசையை விடாமல் பிடித்து வைத்துள்ளார்.
இதனாலே கடந்த டிசம்பர் மாதம் கூட வாரிசு படத்தில் நடித்து முடித்த பிறகு, நடிகர் விஜய் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டை ஒன்றை திடீரென பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் 'MS தோனி' தான் வைத்து விளையாடிய கிரிக்கெட் மட்டையை யோகி பாபுவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்
இதுகுறித்து யோகி பாபு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "MSDhoni கைகளில் இருந்து நேரடியாக.. அவர் நெட்டில் விளையாடிய பேட்.. கிரிக்கெட் மட்டைக்காக நன்றி சார். உங்கள் கிரிக்கெட் நினைவகம் மற்றும் சினிமா நினைவாற்றலுடன் எப்போதும் போற்றப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எம்.எஸ்.தோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் "Lets Get Married" என்ற படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது. யோகி பாபுவின் கிரிக்கெட் ஆர்வத்தினால் அவர் எம்.எஸ்.தோனி கையெழுத்திட்ட, அவர் விளையாடிய பேட்டை பெற்றதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!