Cinema
“அப்பாடா.. ஒரு வழியா BIKILI யாருனு தெரிஞ்சுருச்சு..” - வெளியானது பிச்சைக்காரன் 2 Sneak Peek ட்ரெய்லர் !
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.
அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இதற்கான மோஷன் போஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 90% மேலாக நிறைவடைந்த நிலையில், இதன் ஸ்னீக் பீக் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதில் Neurosurgery-ஐ பற்றி பேசப்பட்டுள்ளது. மேலும் இதில் வில்லன் யார் என்று தெரியவந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான தேவ் கில்தான் இதில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இவர் சுறா படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.
முன்னதாக பிச்சைக்காரன் 2 படத்துடன் சேர்ந்து கீழே 'Anti Bikili' என்ற டைட்டிலும், இதன் தீம் மியூசிக்கும் வெளியானது. மேலும் "Bikili-யோட எதிரிதான் Anti Bikili" என்று போஸ்டர் ஒன்றும் வெளியானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் 'Bikili யாரு சார்' என்று கிண்டல் செய்து வீடியோ, மீம்கள் வெளியிட்டனர். Bikili என்றால் எதிரி (வில்லன்) என்று அர்த்தமாம். Anti Bikili (hero) விஜய் ஆண்டனி என்றால், Bikili அவரது எதிரி என்று தான் அர்த்தம்.
இந்த ஸ்னீக் பீக் வீடியோவில் தேவ் கில் வில்லன் போல் காட்சி அளிக்கிறார். எனவே அவர்தான் வில்லனாக இருக்க்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் தற்போது Bikili தேவ் கில் தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, விஜய் ஆண்டனிக்கு கடும் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 2-ம் தேதி விபத்தில் உடைந்த தனது தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை தொடங்குவதாகவும் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!