Cinema

விக்ரம் படத்தில் இடம்பெற்ற வசனம்.. LEO-வில் இணைகிறாரா கமல் ? - இணையத்தில் கசிந்த விஜய் பட தகவல் !

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தனது 67-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார்.

வாரிசு படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்கள் வரத்தொடங்கியது. அதன்படி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். Seven Screen Studio எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார். எடிட்டிங் பிலோமின் ராஜ், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ், ரத்தின குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகரும் KGF 2 வில்லனுமான 'சஞ்சய் தத்', பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மாத்திவ் தாமஸ் (மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்), கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

அதோடு தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு காஷ்மீர் வரை சென்றுள்ளனர். இது தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் தினம் தினம் வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. அதன்படி விஜய் 67 படத்திற்கு 'லியோ' (LEO) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' இந்த மூன்று படங்களும் போதைப் பொருட்கள் மற்றும் கேங்ஸ்டர் கலாச்சாரத்தை மையாக வைத்து வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ். இதில் 'கைதி மற்றும் 'விக்ரம்' படம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இதனால் மார்வெல் படங்களைப் போன்று லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (LCU) என அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் இவரது அடுத்த படமும் இதன் தொடர்ச்சியாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனை உறுதி செய்யும் வகையிலேயே நடிகர் விஜயின் T67 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் சாக்லேட் தயாரிப்பதுபோன்று, ஒரு கேங்ஸ்டெர் கதை கொண்டுள்ளது. மேலும் இதில் வரும் வசனமானது 'Bloody Sweet' என்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதற்கும் கைதி, விக்ரம் படத்திற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்று ரசிகர்கள் ஆராய்ந்து ஒரு விஞ்ஞானி போல் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் லியோ ப்ரோமோவில் விஜய் தனது கையில் 'erythroxylum' என்று சொல்லப்படும் காஃபி கொட்டையை வைத்துள்ளார்.

இந்த erythroxylum முன்னதாக கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் வரும் ஒரு போதை பொருளை குறிக்கிறது. அதோடு லியோ ப்ரோமோவில் பகலில் காரில் கேங்ஸ்டர் வரும்போது மேலே ஒரு கழுகு (Eagle) பறக்கிறது.

இது விக்ரம் படத்தில் வரும் கமலின் கேங்கை குறியிடுகிறது. தொடர்ந்து கைதி படத்தில் கார்த்தி 'தான் முன்னதாக ஒரு பேக்கரியில் வேலை பார்த்தாக' கூறும் வசனம், மற்றும் லியோ ப்ரோமோவில் விஜய் ஒரு பேக்கரி வைத்து நடத்துவது - இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது.

மேலும் கைதி, விக்ரம் படத்தில் தேள் (Scorpio) குறியீடு வந்திருக்கும். அதேபோல் விஜய் 67 படத்தின் டைட்டில் சிங்கம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கும் லியோ (LEO) என்று பெயர் பெற்றுள்ளது.

மொத்தத்தில் இவை அனைத்திற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. எனவே இந்த படத்தை பார்க்கும் முன்பு கைதி, விக்ரம் படத்தை பார்த்தபிறகே இந்த படத்தை பார்த்தால் மட்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: AK 62 படத்தில் இருந்து விலகல்.. ரசிகர்களுக்கு சூசகமாக உணர்த்திய விக்னேஷ் சிவன்.. என்ன விஷயம் தெரியுமா ?