Cinema
“ரொம்ப நேரமாகியும் கதவை திறக்கல..” - வாணி ஜெயராம் இறப்பு குறித்து பணிப்பெண் பரபரப்பு தகவல் !
பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) இன்று திடீரென்று மணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. கலைவாணி என்பதால் தானோ என்னவோ கலையான இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
தொடர்ந்து இசை கற்று வந்த இவர், 1971-ல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா என 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு பக்கம் திரையுலகில் இருந்தாலும், தனியாக ஆல்பம், பக்தி பாடல்கள் உள்ளிட்டவையையும் பாடி வந்துள்ளார்.
தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு ஒன்றிய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் தான் ஆகிறது, அதற்குள்ளும் இவரது பிரிவு திரையுலகில் நீங்கா துயரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் மரணமடைந்தார். இவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இவரது மரணம் குறித்து இவர் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மலர்க்கொடி கூறுகையில், “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை.
என் கணவரிடம் கால் செய்ய சொன்னேன். அவரும் பல முறை முயற்சித்தும் போனை எடுக்கவில்லை. அதன்பிறகு கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம். உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார்.
அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பிரச்சினையுமில்லை. அவர் என் தாயைப் போல. நாங்கள் அம்மா - மகள் போல பழகுவோம்” என்றார்.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?