Cinema
“என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்னு சேந்துருச்சு..” - விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி ட்வீட் !
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.
அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இதற்கான மோஷன் போஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார்.
இதனால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள மலேசியா, கோலாலம்பூருரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அவரது வாயில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் பேச முடியவில்லை என்றும், மூச்சு விடவே சிரம படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் தற்போது 90% குணமடைந்து விட்டதாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பு இதயங்களே.. நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி !" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இயக்குநர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில், “பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில அவரு வீட்டுக்கு வந்துட்டாரு. இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லிருக்காங்க.
கூடிய சீக்கிரம் ரசிகர்கள்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவரை பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!